''இப்படி டிரை பண்ணுங்க, என்னுடைய அனுபவம் இது'' - செல்வராகவன் அட்வைஸ் - ஏன் இப்படி சொல்றார் ?
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது அல்லது சோகமாக இருப்பது என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

மகிழ்ச்சியாக இருப்பதை தேர்ந்தெடுங்கள். அது சில நாட்களுக்கு பொய்யானதாக இருக்கும். ஆனால் அதுவே பழகி, தினசரி நடைமுறையாக மாறிவிடும். நீங்கள் மகிழ்ச்சியானவராக மாறிவிடுவீர்கள். என்னுடைய அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்ஜிகே' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் செல்வராகவன் இயக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய செல்வராகவன் அடுத்ததாக தான் தனுஷூடன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார்.
In life we can choose to be happy or sad. Choose being happy. Even if you don't feel up to it, fake it for a few days. Then it will become a routine and you might forget that you are faking it and actually start feeling happy. My experience! #StayHappy #StayHomeStaySafe
— selvaraghavan (@selvaraghavan) April 24, 2020