“9 லுக்கா? அட இல்லப்பா.. ”- கோமாளி-ல் ஜெயம் ரவிக்கு எத்தனை லுக்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரெடியாகி உள்ள படம். கோமாளி.

Director Pradeep Ranganathan Tweet about Jayam Ravi Comali

இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படம் என்ற விளம்பரத்துடன் தான் தினம் ஒரு கெட் அப் போஸ்டர் வெளியிட்டு அசத்தினர்.

இந்நிலையில் முதலுக்கே மோசம் என்பது போல, ரவி ஐந்து கெட் அப்களில் தான் நடிக்கிறாராம். மனித பரிணாம வளர்ச்சியை பற்றி படம் பேசுவதன் காரணத்தால் ஆதாம், கற்கால மனிதன் போன்றவை பட ப்ரோமோஷனுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட போட்டோஸ்.

அதே போல் இன்றிலிருந்து படத்தில் வராத காஜல் அகர்வால் போட்டோஸ் வெளியிடுவேன், நீங்கள் போஸ்டர் ரெடி செய்து அசத்துங்க என பதிவிட்டுள்ளார்.