Exclusive: சென்னை வெள்ளத்தை பிரம்மாண்டமாக Recreate செய்த கோமாளி படக்குழு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 05:06 PM
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'கோமாளி'. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரத்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்காக 2015 ஆம் ஆண்டு உருவான சென்னை வெள்ளம் தொடர்பான காட்சிகளை மீள் உருவாக்கம் செய்துள்ளனராம். இதுகுறித்து பேசிய இயக்குநர் பிரதீப், இந்த படத்துக்காக சென்னை வெள்ளத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளோம்.
அதற்காக இன்டோர் செட் போட்டோம். காரணம் லைட்டிங் சேஞ்சாகிட்டு இருக்கும் என்பதால் தான். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் செட் போட்டோம். அதுக்காக 20 நாட்களுக்கு முன்பே தொட்டி கட்டினோம்.
மடிப்பாக்கம் ஏரியாவ தான் ரீகிரியேட் பண்ணோம். அப்போது மே மாதம் என்பதால் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் கடல் நீரை பயன்படுத்தினோம். நான்கு நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக ஷூட் செய்தோம். என்றார்.