Breaking: ஜெயம் ரவி - ஹிப்ஹாப் தமிழா இணையும் 'கோமாளி' படத்தின் சுவாரஸியத் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 01:37 PM
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து, ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tags : Comali, Jayam Ravi, Kajal Aggarwal, Hiphop Tamizha