www.garudabazaar.com

"கமலுக்கு 'விக்ரம்'.. ரஜினிக்கு 'தளபதி' மாதிரி.. அப்போ அஜித்துக்கு?".. லோகேஷ் மாஸ் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.

Director Lokesh Kanagaraj Talking about Film with Ajithkumar

Also Read | போடு... 'ஜெயிலர்' படப்பிடிப்பில் நம்ம 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணன்.. வைரல் BTS வீடியோ!

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 03 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் தான் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.

Director Lokesh Kanagaraj Talking about Film with Ajithkumar

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

Director Lokesh Kanagaraj Talking about Film with Ajithkumar

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து நடத்திய மெகா இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். நவம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Director Lokesh Kanagaraj Talking about Film with Ajithkumar

அப்போது ஒரு ரசிகர், "கமல் வச்சு 'விக்ரம்' படம் பண்ணிட்டீங்க. ரஜினிக்கு 'தளபதி' மாதிரி படம் பண்ணுவேன்னு சொன்னீங்க.. அஜித்குமாருக்கு எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "தீனா திரைப்படம் போல" என பதில் அளித்துள்ளார்.

Also Read | PS1: 'பொன்னியின் செல்வன்' படத்தின் 50வது நாள்.. நடிகர் விக்ரம் வெளியிட்ட மொத்த வசூல் விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Lokesh Kanagaraj Talking about Film with Ajithkumar

People looking for online information on Ajith Kumar, Kaithi, Lokesh Kanagaraj, Master Tamil, Vikram will find this news story useful.