www.garudabazaar.com

துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.. வைரலாகும் BTS போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Actor Ajith Kumar with Dance master Kalyan Thunivu BTS Pic

Also Read | "வெளிய வந்து பார்த்தா தான் தெரியுது.!".. எலிமினேட் ஆன VJ மகேஸ்வரி முதல் வீடியோ..! bigg boss 6 tamil

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Actor Ajith Kumar with Dance master Kalyan Thunivu BTS Pic

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

Actor Ajith Kumar with Dance master Kalyan Thunivu BTS Pic

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கியது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.  'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு தற்போது சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல EVP Film City-யில் முழுவீச்சில் நடைபெற்றது.

 

 

இந்நிலையில், பிரபல நடன இயக்குனர் கல்யாண் துணிவு படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை கோரியோகிராப்ஃ செய்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் கல்யாண். அந்தப் பதிவில்,"மீண்டும் ஒருமுறை எனது நண்பரும் அழகான மனிதருமான தல அஜித்துடன்" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | நடிகர் கார்த்தியின் Facebook Page... கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar with Dance master Kalyan Thunivu BTS Pic

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with Dance master Kalyan, Kalyan, Kalyan Master, Thunivu will find this news story useful.