”நானே நேரில் வருகிறேன்…” உதவி கேட்டவர்களுக்காக தமிழக அமைச்சரை சந்தித்த ராகவா லாரன்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 09, 2019 12:38 PM
திரைப்பட இயக்குநர், நடிகர், நடன இயக்குநர், சமூக செயல்பாட்டாளர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.கடந்த ஆண்டு இவர் இயக்கிய காஞ்சனா 3 பெரும் வெற்றி பெற்றது. ஹிந்தியில் இவர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் ’காஞ்சனா’வின் ரீமேக்கான 'லக்ஸ்மி பாம்' அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

இது தவிர லாரன்ஸ் நோய்வாய்ப் பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவியும், அவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்பும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன் முகநூலில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், சமூக ஊடகத்தில் பலர் தன்னிடம் உதவிக்காக நாடுவதாகவும் அதனை தன்னால் கடந்து போக முடியவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும், அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் நாட உள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று தன் முகநூலில் பதிவிட்டுள்ள லாரன்ஸ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது பற்றி விவாதித்ததாகவும். அமைச்சர் உதவி செய்ய சம்மதம் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், உதவித்தேவைப் படுபவர்களுக்கு தானே நேரில் வந்து உதவி வழங்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.