www.garudabazaar.com

4 மொழிகளில்.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Nanpakal Nerathu Mayakkam Streaming on Netflix from 23rd February

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நாடக காதலே இல்லன்னு சொல்லி".. Pa.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி,  தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கி இருந்தார்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

Nanpakal Nerathu Mayakkam Streaming on Netflix from 23rd February

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தை நடிகர் மம்மூட்டி தயாரித்து நடித்திருந்தார். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Nanpakal Nerathu Mayakkam Streaming on Netflix from 23rd February

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுதி இருந்தார், கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர்.

கேரள அரசின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் நாட்டில் ஜனவரி.27 அன்று இந்த திரைப்படம் வெளியானது.

Nanpakal Nerathu Mayakkam Streaming on Netflix from 23rd February

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள்.. இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளார்களா!?..

தொடர்புடைய இணைப்புகள்

Nanpakal Nerathu Mayakkam Streaming on Netflix from 23rd February

People looking for online information on Mammootty, Nanpakal Nerathu Mayakkam, Netflix will find this news story useful.