www.garudabazaar.com

நடிகர் யோகி பாபு பகிர்ந்த ஓவியம்.. அட ‘வாரிசு’ விஜய்யும் இருக்காரா?.. வைரலாகும் Pic..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகி பாபு பகிர்ந்த ஓவியம் ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Actor Yogi Babu shares Drawing of himself and Vijay Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 4 மொழிகளில்.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. எப்போ?

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

Actor Yogi Babu shares Drawing of himself and Vijay Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தின் ஒரு காட்சியை ஓவியமாக பகிர்ந்திருக்கிறார் யோகி பாபு.

Actor Yogi Babu shares Drawing of himself and Vijay Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் விஜய் நடிப்பில், உருவான வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருந்தார். இதில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்திருந்தனர்.

Actor Yogi Babu shares Drawing of himself and Vijay Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் யோகி பாபுவிற்கு கன்னத்தில் முத்தமிடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனை தத்ரூபமாக ஓவியமாக்கியுள்ளார் ஒருவர். இந்த ஓவியத்தை நடிகர் யோகி பாபு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இருப்பினும் , இதனை யார் வரைந்தது என்பது குறித்து தகவல் ஏதும் பகிரப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த ஓவியம் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "என் Dress எப்படி இருக்கு?".. சிவகார்த்திகேயனுடன் மழலை மொழியில் பேசும் சிறுமி.. Cute வீடியோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Yogi Babu shares Drawing of himself and Vijay Goes Viral

People looking for online information on Vijay, Yogi Babu will find this news story useful.