www.garudabazaar.com

வாத்தி FDFSல் யாத்ரா .. டக்குனு பார்த்தா தனுஷ் மாதிரியே இருக்காருப்பா.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படம் இன்று வெளியாகி உள்ளது.

Dhanush Son Yatra Watching Vaathi Sir Movie FDFS

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Life of AK: வெளிநாட்டு சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. எங்க தெரியுமா ? வைரலாகும் வீடியோ!

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள தமிழ் - தெலுங்கு இருமொழி திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த  படம் தெலுங்கில் சார் (Sir) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் பணிபுரிந்துள்ளனர்.

Dhanush Son Yatra Watching Vaathi Sir Movie FDFS

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர். 

Dhanush Son Yatra Watching Vaathi Sir Movie FDFS

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

இன்று காலை 8 மணி முதல் தமிழகமெங்கும் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த முதல் நாள் முதல் காட்சியை காண நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிரபல திரையரங்கிற்கு வந்திருந்தார்.

Dhanush Son Yatra Watching Vaathi Sir Movie FDFS

Images are subject to © copyright to their respective owners.

கருப்பு வெள்ளை நிற உடையில் காண்பதற்கு தனுஷ் போலவே வந்திருந்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிக்கும் படங்களை முதல் நாள் முதல் காட்சி திரையரங்குகளில் காணும் வழக்கத்தை யாத்ரா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை திரையரங்கில் யாத்ரா கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | முதல் படத்திற்கு 'திரௌபதி புகழ்' மோகன் ஜி வாங்கிய சம்பளம்.. அவரே சொன்ன தகவல்!

வாத்தி FDFSல் யாத்ரா .. டக்குனு பார்த்தா தனுஷ் மாதிரியே இருக்காருப்பா.. வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Son Yatra Watching Vaathi Sir Movie FDFS

People looking for online information on Dhanush, Dhanush son Yatra, Vaathi, Yatra Watching Vaathi Sir Movie FDFS will find this news story useful.