www.garudabazaar.com

"என் Dress எப்படி இருக்கு?".. சிவகார்த்திகேயனுடன் மழலை மொழியில் பேசும் சிறுமி.. Cute வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுமி ஒருவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் கியூட்டாக பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Actor Sivakarthikeyan talks to Girl cute Video Goes Viral

Also Read | 4 மொழிகளில்.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. எப்போ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பளராக இருந்து சினிமாவிற்குள் வந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக்கொண்டார். இவருடைய "டான்" படத்துக்கு பின், "ப்ரின்ஸ்" படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இந்த ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது. ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

Actor Sivakarthikeyan talks to Girl cute Video Goes Viral

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Actor Sivakarthikeyan talks to Girl cute Video Goes Viral

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறுமி ஒருவரிடம் கியூட்டாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனக்கு மொட்டை அடித்திருப்பதாக சொல்லும் சிறுமி,"என் டிரெஸ் எப்படி இருக்கு?" என கேட்கிறார். அப்போது,"டிரெஸ் சூப்பரா இருக்கே. யாரு வாங்கிக்கொடுத்தாங்க?" என சிவகார்த்திகேயன் கேட்க, தாத்தா வாங்கிக் கொடுத்ததாக சொல்கிறார் அந்த சிறுமி.  தொடர்ந்து, தான் கழுத்து செயின் அணிந்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் சிறுமி சொல்ல, சூப்பராக இருப்பதாக கியூட்டாக பதிலளிக்கிறார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan talks to Girl cute Video Goes Viral

இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சிவகார்த்திகேயனின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read | மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள்.. இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளார்களா!?..

"என் DRESS எப்படி இருக்கு?".. சிவகார்த்திகேயனுடன் மழலை மொழியில் பேசும் சிறுமி.. CUTE வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sivakarthikeyan talks to Girl cute Video Goes Viral

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.