தனுஷின் ENPT அடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 26, 2019 10:25 AM
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்ய மனோஜ் பரமஹம்ஸா படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட்டானது. சமீபத்தில், பலரது மனம் கவர்ந்த ‘மறுவார்த்தை பேசாதே’ காதல் பாடலின் வீடியோ புரொமோ வெளியானது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்பாடலை பிரபல சென்சேஷன் சிங்கரும், இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஒரு நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் சர்ப்ரைஸாக நாளை (நவ.26) மாலை ரிலீஸ் செய்யவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.