'சிதம்பரம், பச்சையம்மாவுடன் மீண்டும் சிவசாமி...' - 'அசுரன்' நடிகை மஞ்சு வாரியர் ட்வீட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 18, 2019 11:54 AM
கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
![Manju Warrier shares Asuran moment with Dhanush, Ken Manju Warrier shares Asuran moment with Dhanush, Ken](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/manju-warrier-shares-asuran-moment-with-dhanush-ken-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் கென், டிஜே, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடிகர்களின் பெயரும் அவர்கள் பேசிய வசனமும் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனுஷ், கென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சிவசாமியுடன் மீண்டும் பச்சையம்மாவும் சிதம்பரமும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sivasaamy reunites with Pachaiyamma and Chidambaram 😂❤️@dhanushkraja @KenKarunaas #Asuran #friends #family #reunion pic.twitter.com/2uzRdZUDkx
— Manju Warrier (@ManjuWarrier4) November 17, 2019