'எனக்கு ஒரு பிரச்சனைனு தெரிஞ்ச பிறகு...' - இயக்குநர் கௌதம் மேனன் உருக்கமான பேச்சு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 25, 2019 02:27 PM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் வெளியிடவிருக்கிறார்.
இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் 'பப்பி' படத்தில் ஹீரோவாக நடித்த வருண் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி K.கணேஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய கௌதம் மேனன், ''சிரிச்சு, வேலையை ரசிச்சு செஞ்சு ரொம்ப நாளாச்சு. இப்போ சமீபகாலமா என் சிரிப்பிற்கு காரணமான ஜசரி K.கணேஷ் நன்றி சொல்ல வேண்டும்.
'எனை நோக்கிப் பாயும் தோட்டா' இன்னும் கொஞ்ச நாளில் ரிலீஸ் ஆக போகுது. அவர் எடுத்த முயற்சியினால் தான் ரிலீஸ் ஆகப் போகிறது. அதன் பிறகு நான் பண்ணப் போற படம் 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம். ஐசரி கே.கணேஷ் சாரை எனக்கு ஒரு கல்வியாளராக தான் தெரியும். என்னோட மூனு பசங்க அவர் பள்ளியில தான் படிச்சாங்க. எனக்கு ஒரு பிரச்சனைனு தெரிஞ்ச பிறகு கூப்டாரு.
என்னிடம் ஒரு லவ் ஸ்டோரி இருக்கு. நான் வருணை வைத்து பன்றேனு சொன்னேன். அப்புறம் வருணை பார்த்த பிறகு லவ் ஸ்டோரியை தூக்கி வச்சுட்டு ஆக்சன் பிலிம் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்'' என்றார்.
'எனக்கு ஒரு பிரச்சனைனு தெரிஞ்ச பிறகு...' - இயக்குநர் கௌதம் மேனன் உருக்கமான பேச்சு வீடியோ