'கண்டிப்பா தனுஷ் கூட படம் பண்ணுவேன்' - பாலிவுட் இயக்குநர் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான 'அசுரன்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு  தயாரித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 

Bole Chudiyan director Shamas Nawab Siddiqui tweets about Actor Dhanush

இதனையடுத்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நவாஸுதின் சித்திகியின் சகோதரரும் 'போல் சுடியான்' (Bole Chudiyan) படத்தை இயக்கிவருபவருமான ஷமஸ் நவாப் சித்திக்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ''சூப்பர் ஸ்டார் தனுஷின் படங்களின் கலெக்ஷனை பார்த்து முடித்துள்ளேன். அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டுள்ளேன். கண்டிப்பாக எதிர்காலத்தில் அவருடன் நல்ல கதையுடன் பணிபுரிவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.