2020 காதலர் தினத்தன்று வெளியாகும் கவுதம் மேனனின் படம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 23, 2019 03:18 PM
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ நவ. 29ம் தேதி ரிலீசாகிறது.

இதே வேளையில், விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம்; முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி உருவாக்கும் வெப் சீரீசிஸ் ஆகியவற்றின் பணிகளும் நடைபெற்று வருவதால் 2020ம் ஆண்டு கவுதம் மேனனுக்கு ‘ரேப்பிட் ஃபையர்’ ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையில் கவுதமின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
’ஜோஷுவா’ என்ற இந்த படத்தில் பப்பி படம் மூலம் அறிமுகமான வருண் நாயகனாக நடிக்கிறார்.
ஆக்ஷன் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறர்.
அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Here's the Second Look of @menongautham’s #JOSHUA featuring @iamactorvarun ! Team is giving Surprises Now & then let's wait to watch few more surprises in upcoming days..
— Vels Film International (@VelsFilmIntl) November 23, 2019
" Valentine 2020 Release " #JoshuaSecondLook @iamRaahei @VelsFilmIntl pic.twitter.com/jmng4hbnr6