தனுஷின் ENPT லவ் ட்ரீட்..! ‘மறுவார்த்தை..’ Surprise video எப்போ தெரியுமா..?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 21, 2019 05:41 PM
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்ய மனோஜ் பரமஹம்ஸா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட்டானது. இந்நிலையில், பலரது மனம் கவர்ந்த ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற காதல் பாடலின் 20 நொடி வீடியோ புரொமோவை வரும் நவ.23ம் தேதி மாலை 7 மணிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்பாடலை பிரபல சென்சேஷன் சிங்கரும், இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடலின் வீடியோவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Fall in love with your favourite song all over again. 20 seconds video promo of #Maruvaarthai song releasing on 23rd November at 7 pm! ♥ #ENPTfromNov29 #MaruvaarthaiPromo @dhanushkraja @menongautham @akash_megha @SasikumarDir @DarbukaSiva @VelsFilmIntl @Madan2791 @itssensen pic.twitter.com/llEF0KJGdz
— OndragaEntertainment (@OndragaEnt) November 20, 2019