www.garudabazaar.com

Vaathi : தனுஷ் fans -க்கு பேக் டூ பேக் ட்ரீட்.. வந்தாச்சு ‘வாத்தி’ படத்தின் மெகா அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

Dhanush Vaathi aka Sir tamil telugu movie official release date

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. இப்படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி , இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி ‘வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் வெற்றிமாறன் இயக்கத்திலான அசுரன் திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய அரசின் தேசிய விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi aka Sir tamil telugu movie official release date

People looking for online information on Dhanush, Sir, SIR Release date, Vaathi, Vaathi Release date will find this news story useful.