www.garudabazaar.com
iTechUS

சந்திரமுகி - 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் கங்கனா ரனாவத்.. எப்போ? எங்கே? BREAKING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

Chandramukhi 2 next schedule starts on January 31st in Hyderabad

Also Read | துணிவு படத்தின் வெற்றி.. சொந்த ஊரில் இயக்குனர் வினோத் தந்தையை கௌரவித்த பிரபல தியேட்டர்!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும்  சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Chandramukhi 2 next schedule starts on January 31st in Hyderabad

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Chandramukhi 2 next schedule starts on January 31st in Hyderabad

இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.

Chandramukhi 2 next schedule starts on January 31st in Hyderabad

2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் துவங்கி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐத்ராபாத் படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் & கங்கனா ரனாவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | BREAKING: சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்.. மீண்டும் இணையும் சிபி ராஜ் & சத்யராஜ்?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chandramukhi 2 next schedule starts on January 31st in Hyderabad

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Movie Update, Kangana Ranaut, Lyca Productions, Raghava Lawrence will find this news story useful.