www.garudabazaar.com

Video: "பிரிட்டிஷ் பொண்ண Love பண்ணும் இந்திய பையன்".. 'PRINCE' பற்றி SK ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் முன் வெளியீட்டு விழா ஐத்ராபாத் நகரில் நேற்று நடந்தது.

SivaKarthikeyan Talked About Prince Logline in Hyderabad Pre Release Event

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்.. ரிலீஸ் எப்போ? ஜெயம் ரவி சொன்ன சூப்பர் தகவல்!

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

SivaKarthikeyan Talked About Prince Logline in Hyderabad Pre Release Event

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் நடந்த இந்த படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இந்த பட டிரெய்லர் வெளியிடப்பட்டது.

SivaKarthikeyan Talked About Prince Logline in Hyderabad Pre Release Event

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Talked About Prince Logline in Hyderabad Pre Release Event

இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், "ஒரு இந்திய ஆண், ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பது தான் இந்த ப்ரின்ஸ் படத்தின் ஒன்லைன், இந்த ஒன்லைனை அனுதீப் அவரது ஸ்டைலில் படமாக கொடுத்துள்ளார்" என பேசியுள்ளார்.

Also Read | PS1: பொன்னியின் செல்வன் படத்தின் மூன்று வார மொத்த வசூல்.. தெறி மாஸ்

VIDEO: "பிரிட்டிஷ் பொண்ண LOVE பண்ணும் இந்திய பையன்".. 'PRINCE' பற்றி SK ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Talked About Prince Logline in Hyderabad Pre Release Event

People looking for online information on Prince, Prince Pre Release Event, Sivakarthikeyan will find this news story useful.