www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. மொத்த ஐரோப்பிய தியேட்டர் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

Dhanush Vaathi Sir Movie Europe Theatrical Rights Sold

Also Read | கார்த்தி நடிக்கும் "சர்தார்".. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் தெறி அப்டேட்!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி , இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

Dhanush Vaathi Sir Movie Europe Theatrical Rights Sold

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  ‘வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush Vaathi Sir Movie Europe Theatrical Rights Sold

இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமையை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் அடுத்து தயாராகி வருகிறது.

 

Also Read | AK62: "அமைதிக்கு முன் புயல்".. அஜித்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Sir Movie Europe Theatrical Rights Sold

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Sir Movie, Vaathi Sir Movie, Vaathi Sir Movie updates will find this news story useful.