தனுஷ் - ராஸிகண்ணா நடிக்கும் புதிய படம்.. வெளியான COLOURFUL கேரக்டர் லுக் போஸ்டர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Dhanush Raashi Kanna Thiruchitrambalam Movie New Charecter Look Poster

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20.. FIRST LOOK போஸ்டர் & TITLE எப்போ? தமன் கொடுத்த சூப்பர் அப்டேட்

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Dhanush Raashi Kanna Thiruchitrambalam Movie New Charecter Look Poster

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ராஸிகண்ணா காரினுள் இருப்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது. அனுஷா எனும் கதாபாத்திரத்தில் ராஸிகண்ணா நடித்துள்ளார்.

Dhanush Raashi Kanna Thiruchitrambalam Movie New Charecter Look Poster

தனுசுடன் பள்ளி காலத்தில் கூட படித்த சக முன்னாள் மாணவியாக ராஸிகண்ணா நடித்துள்ளார்.

இன்று முதல் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Dhanush Raashi Kanna Thiruchitrambalam Movie New Charecter Look Poster

விரைவில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சூர்யாவுக்கு கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்.. விலை எம்புட்டு தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Raashi Kanna Thiruchitrambalam Movie New Charecter Look Poster

People looking for online information on Dhanush, Raashi kanna, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Updates will find this news story useful.