Behindwoods Gold Medals : “நெல்சன் சார் வந்தாதான் … ” பூஜா ஹெக்டேவின் ’புட்ட பொம்மா’ Dance.. Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஹைண்ட்வுட்ஸ் கோல்ட் விருதில் நெல்சன் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியது கவனத்தை ஈர்த்துள்ளது.

Pooja hedge and Nelson viral dance in BGM 8

Also Read | வாவ்… ரோலக்ஸ் கையில் ’Rolex’.. அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… viral pic

Behindwoods Gold விருதுகள்…

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

Pooja hedge and Nelson viral dance in BGM 8

Best Entertainer Female

இந்த நிகழ்ச்சியில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பூஜா ஹெக்டேவுக்கு ‘சிறந்த எண்டர்டெயினர் (பெண்கள்)’ என்ற பிரிவில் வழங்கப்பட்டது. அந்த விருதை பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் வழங்கினார். அதன் பிறகு பூஜா ஹெக்டேவை நடனமாட சொல்லி ரசிகர்கள் அறிவுறுத்தினர்.

Pooja hedge and Nelson viral dance in BGM 8

புட்டபொம்மாவுக்கு ஆடிய நெல்சன்

அப்போது பேசிய பூஜா ஹெக்டே “நெல்சன் சார் வந்தாதான் நான் டான்ஸ் ஆடுவேன். நீங்க எல்லாம் அவர் புட்ட பொம்மா பாடலுக்கு ஆடியதை பார்த்ததில்லை.” எனக் கூறி நெல்சனை மேடைக்கு அழைத்தார். ஆனால் முதலில் தயங்கிய நெல்சன் ரசிகர்களின் ஆரவாரத்தால் மேடையில் ஏறி பூஜாவோடு ‘புட்டபொம்மா’ பாடலுக்கு நடனமாடினார். இது நிகழ்வுக்கு வந்திருந்த ரசிகர்கள் மற்றும் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Pooja hedge and Nelson viral dance in BGM 8

Also Read | “First Half-ல கமல் சாருக்கு கம்மியான போர்ஷன்”… ஏன்? – ‘விக்ரம்’ இயக்குனர் லோகேஷ் Exclusive

BEHINDWOODS GOLD MEDALS : “நெல்சன் சார் வந்தாதான் … ” பூஜா ஹெக்டேவின் ’புட்ட பொம்மா’ DANCE.. VIDEO வீடியோ

Pooja hedge and Nelson viral dance in BGM 8

People looking for online information on Behindwoods Gold Medals, BGM 8, Nelson Dilipkumar, Pooja Hedge will find this news story useful.