14 மாதங்களுக்கு பின் தியேட்டரில் ரிலீஸாகும் தனுஷ் படம்.. ரிலீஸ் எப்போ? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 14 மாதங்களுக்கு பின் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது.

Dhanush’s THIRUCHITRAMBALAM releasing on July 1st 2022.

Also Read | கணவருடன் குழந்தை இருக்கும் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே!

தனுஷ், 'நானே வருவேன்' படத்திலும், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

முன்னதாக நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

Dhanush’s THIRUCHITRAMBALAM releasing on July 1st 2022.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

Dhanush’s THIRUCHITRAMBALAM releasing on July 1st 2022.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush’s THIRUCHITRAMBALAM releasing on July 1st 2022.

கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம், கடந்த 2021 ஏப்ரலில் ரிலீசானது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகின.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush’s THIRUCHITRAMBALAM releasing on July 1st 2022.

People looking for online information on Dhanush, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Updates will find this news story useful.