Sinam D Logo Top
www.garudabazaar.com

PONNIYIN SELVAN: கார்த்தி - த்ரிஷா - ஷோபிதா தோன்றும் "ராட்சஸ மாமனே".. புதிய காட்சிகளுடன் வெளியான LYRICAL VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் 'ராட்சஸ மாமனே' பாடலின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan Movie Ratchasa Maamaney Lyrical Video

Also Read | தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் PS1 நடிகர்கள்.. யாரெல்லாம் வராங்க? விக்ரம் கொடுத்த அப்டேட்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie Ratchasa Maamaney Lyrical Video

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆடியோ வடிவில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்கள் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Movie Ratchasa Maamaney Lyrical Video

ராட்சஸ மாமனே பாடலை மகேஷ் விநாயக் ராம் & பாலக்காடு ஶ்ரீராம் உடன் இணைந்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். பாடலாசிரியர் கபிலன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய நடன காட்சிகளுடன் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி (வந்தியத்தேவன்), த்ரிஷா (குந்தவை), ஷோபிதா துலிபாலா (வானதி) கதாபாத்திரங்கள் இந்த பாடலில் தோன்றியுள்ளனர்.

Ponniyin Selvan Movie Ratchasa Maamaney Lyrical Video

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

Also Read | மாரி செல்வராஜின் 'மாமன்னன்'.. வைரலாகும் வடிவேலுவின் BTS போட்டோ..! சூப்பர் தகவல்

PONNIYIN SELVAN: கார்த்தி - த்ரிஷா - ஷோபிதா தோன்றும் "ராட்சஸ மாமனே".. புதிய காட்சிகளுடன் வெளியான LYRICAL VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Ratchasa Maamaney Lyrical Video

People looking for online information on Karthi, Ponniyin Selvan part 1, Ratchasa Maamaney Lyrical Video, Shobhita Rana, Trisha Krishnan will find this news story useful.