Sinam D Logo Top
www.garudabazaar.com

மகன்களுடன் தியேட்டர்ல படம் பார்க்கும் தனுஷ்.. என்ன படம் தெரியுமா? பரவும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

Also Read | Neeya Naana : "அந்த Showல என் மனைவி அப்படி பேசுனதுக்கு காரணம்..".. உண்மையை உடைத்த Viral கணவர்.!!

நடிகர் தனுஷ், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் சமீப காலமாக நேரம் செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

சில நாட்களுக்கு முன் இளையராஜா இசை நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டதும் அங்கு இளையராஜா இசையில் தனுஷ் பாடிய தாலாட்டும் வைரலானது.

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

அதற்கு முன் நானே வருவேன் படத்தின் ஊட்டி படப்பிடிப்பு தளத்தில் மகன்களுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின

சமீபத்தில் யாத்ரா, தான் படிக்கும் பள்ளியின் விளையாட்டு குழு  கேப்டனாக அணிவகுப்பு செய்த புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி வைரலாகின.  இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், ரிலீஸான  'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தனுஷ், தனது மகன்களுடன் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. யாத்ரா & லிங்கா இருவரும் திருச்சிற்றம்பலம் எனும் பெயர் பொறித்த ஆடையில் அமர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தினை பார்த்துள்ளனர்.

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றினார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. படத்தோட ரிலீஸ் தேதி இதுவா? மாஸ் தகவல்

மகன்களுடன் தியேட்டர்ல படம் பார்க்கும் தனுஷ்.. என்ன படம் தெரியுமா? பரவும் வீடியோ! வீடியோ

Dhanush With His Sons and Watching Thiruchitrambalam Movie

People looking for online information on Dhanush, Dhanush Watching Thiruchitrambalam Movie, Thiruchitrambalam will find this news story useful.