www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய பிரபல OTT..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.

Dhanush Naane varuven digital rights acquired by prime

இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திருச்சிற்றம்பலம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, தனுஷ் நடித்த வரும் வாத்தி படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது.

இதனிடையே தனுஷின் சகோதரர் மற்றும் இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்'  படத்தின் பல போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், நானே வருவேன் விரைவில் திரையரங்குகளில் வெளியாக போவதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி S தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில், தற்போது நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றியுள்ளது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தினை அமேசான் ப்ரைம் கைபற்றி உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சாட்டிலைட் உரிமத்தினை மிக பெரிய தொகைக்கு பிரபல சேனலான சன் டி.வி வாங்கி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் குறிப்பிட்டிருந்தது. மேலும், நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக, அடுத்தடுத்து அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane varuven digital rights acquired by prime

People looking for online information on Dhanush, Naane Varuven, Selvaraghavan will find this news story useful.