www.garudabazaar.com

யுவன் இசையில் 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. எப்போ ரிலீஸ்? சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.

Naane Varuven Movie First Single Song Update

Also Read | பிரபல OTT-க்கு தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ரசிகர்களை கவரும் மெர்சலான தமிழ் டிரெய்லர்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

Naane Varuven Movie First Single Song Update

சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

அடுத்ததாக நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு தனுஷின் லுக் உள்ள படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது. வில் அம்புடன் நவநாகரீக தோற்றத்தில் காட்டில் தனுஷ் இருப்பது போல போஸ்டர் அமைந்தது.

Naane Varuven Movie First Single Song Update

  இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதல் சிங்கிள் பாடல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Naane Varuven Movie First Single Song Update

"உங்கள் நெஞ்சத்தை வருடவரும் இசை! நானே வருவேன் திரைப்படத்தின் முதல் lyrical video 7/9/22 அன்று, மாலை 4:40'க்கு வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்" என தாணு ட்வீட் செய்துள்ளார்.

Also Read | Ponniyin Selvan 1: "ரவிதாசன்".. பொன்னியின் செல்வன்.. அடுத்த மாஸ் கேரக்டர் லுக்.!

தொடர்புடைய இணைப்புகள்

Naane Varuven Movie First Single Song Update

People looking for online information on Dhanush, Naane Varuven, Naane Varuven Movie, Naane Varuven Movie First Single Song will find this news story useful.