Megham Karukatha: திருச்சிற்றம்பலம் மேகம் கருக்காதோ பாட்டுக்கு டான்ஸ்.. வைரலான ஜப்பான் ஜோடி.!
முகப்பு > சினிமா செய்திகள்சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Also Read | BIGG BOSS சீசன் - 6.. கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ! கமல் பேசுற "பஞ்ச்" தான் ஹைலைட்!
டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தில் பாரதிராஜாவும், பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் முறையே தனுஷின் தாத்தா & அப்பாவாக நடித்துள்ளனர். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.
அனிருத் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்திடில் ட்ரெண்ட் ஆகின. அதில் மேகம் கருக்காத எனும் மெலோடி பாடல் காதல் ரசம் ததும்ப பலரது விருப்ப பிளே லிஸ்டில் ஆன் ரிப்பீட் மோடில் ஒலிக்க ஆரம்பித்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் அமைத்த ஒரு சிக்னேச்சர் ஸ்டெப் இளசுகளிடையே வைரலானது. ஆம், பலரும் சோஷியல் மீடியா, ரீல்ஸ் என இந்த ஸ்டெப்பை ஆடி பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாடலுக்கு ஜப்பானிய ஜோடிகள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள அந்த சிக்னேச்சர் ஸ்டெப்பையும் இந்த ஜப்பானிய ஜோடி ஆடியுள்ளனர். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் மத்தியில் கூட மேகம் கருக்காதா பாடல் வைரலாகியுள்ளதை சிலாகித்து இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Japanese Couples ❤ #MeghamKarukatha #Thiruchitrambalam #DnA@dhanushkraja @MithranRJawahar @anirudhofficial pic.twitter.com/BMd9VpKT1h
— Dhanush Boopathi (@KjBoopathi) September 4, 2022
Also Read | Soppana sundari: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி'.. வெளியானது வேறலெவல் டைட்டில் லுக்.!