Anantham
www.garudabazaar.com

”பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் CWC சிவாங்கி… இதுவரை வெளிவராத வைரல் BTS pics!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சிவாங்கி.

CWC fame sivangi with vijay in beast BTS pic

Also Read | ”கல்யாணம் எப்போன்னு கேட்டா …” ”லவ்வர் பேர் என்ன வீடியோவே தர்றேன்”… மஞ்சிமாவின் வைரல் post!

பீஸ்ட் ரிலீஸ்…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 அம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக பீஸ்ட் இருந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி படத்தைப் பார்த்தனர். தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகள் வரை இந்த திரைப்படம் வெளியானது.

பீஸ்ட் வரவேற்பு…

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் நேற்று வெளியானது. நெல்சனின் முந்தைய படங்களைப் போல நகைச்சுவை படமாக இல்லாமல் பீஸ்ட் திரைப்படம் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டிருந்தது. படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

CWC fame sivangi with vijay in beast BTS pic

படக்குழுவினருக்கு விஜய்யின் விருந்து…

இந்நிலையில் படம் ரிலீஸாகி 2 வாரங்களுக்குப் பிறகு பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் தனது வீட்டில் சமீபத்தில் விருந்து வைத்துள்ளார். இது குறித்த போட்டோவை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் அறிக்கை வெளியிடவே அது வைரலானது. இந்த விருந்தில் பூஜா ஹெக்டே, நெல்சன், விடிவி கணேஷ், நடன இயக்குனர் சதீஷ், நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படம் நேற்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து பலரும் பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அபர்ணா தாஸ் அப்படி பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகின.

CWC fame sivangi with vijay in beast BTS pic

சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள்…

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் சிவாங்கி பீஸ்ட் படத்தின் செட்டில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஜாலியோ ஜிம்கானா பாடல் பதிவின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “ அன்பான வார்த்தைகள் சொன்ன தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” எனக் கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார்.

CWC fame sivangi with vijay in beast BTS pic

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் CWC சிவாங்கி… இதுவரை வெளிவராத வைரல் BTS PICS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC fame sivangi with vijay in beast BTS pic

People looking for online information on Anirudh Ravichander, Beast, CWC Sivangi, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.