தங்க நிற உடையில் ஜொலித்த நடிகை வேதிகா.. இணையத்தை கலக்கும் புதிய வைரல் போட்டோஷூட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வேதிகாவின் LATEST போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Vedhika Latest golden Photoshoot pictures with diamond

Also Read | அடடே.. செம மாஸ் சம்பவம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.‌. வேற லெவல் இது..!

இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் அர்ஜூன் நடித்த மதராஸி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வருபவர்.

குறிப்பாக சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார், பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் பரவலாக பாராட்டப்பட்டது.

Actress Vedhika Latest golden Photoshoot pictures with diamond

அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார். பின் பரதேசி படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பரதேசி படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.

Actress Vedhika Latest golden Photoshoot pictures with diamond

பின் வசந்த பாலன் இயக்கத்தில்  காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடியும், மாலத்தீவு சுற்றுலா சென்றும் வைரலானார்.

Actress Vedhika Latest golden Photoshoot pictures with diamond

இந்நிலையில் நடிகை வேதிகா தங்க நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ ஷூட்டை தேஜஸ் நெரூர்கர் கிளிக் செய்து உள்ளார். ஹவுஸ் ஆஃப் ஷிகா ஆபரண நிறுவனத்துடன் இணைந்து வேதிகா இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். இந்த போட்டோக்களில் வைர ஆபரணங்களை வேதிகா அணிந்துள்ளார்

Also Read | செம வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்.. பகிர்ந்த சுரேஷ் சந்திரா! முழு தகவல்

Actress Vedhika Latest golden Photoshoot pictures with diamond

People looking for online information on Vedhika, Vedhika Latest Photoshoots will find this news story useful.