கொரோனா வைரஸ்க்கு குட் பை சொன்ன பிரபல நடிகை - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில்  கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களை பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிகைககளை மேற்கொண்டு வருகிறது.

Coronavirus affected Indian actress posts an emotional note as she gets discharged after treatment ft Zoa Morani | பிரபல நடிகை கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாக

கொரோனாவினால் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஆங்காங்கே கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர் குறித்து செய்திகளும் வெளியாகி மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலிவுட் தயாரிப்பாளர் கரிம் மொரானியின் மகள்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது..

இந்நிலையில் கரீம் மொரானியின் மகளும் நடிகையுமான ஜோயா மொரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகிவிட்டதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஜோயா குணமானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor