'இனி இதை செய்யாதீங்க.. இல்லைன்னா ப்ளாக் பண்ணிடுவேன்'' - ட்விட்டர் பதிவுகள்.. விவேக் அதிரடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக கருத்தை முன்வைத்துள்ள்ளார். 

அஜித் விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள் | vivekh request over ajith, vijay and other actor fan fight in twitter

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் விவேக். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் தனது காமெடியால் கலக்கினார். அண்மையில் இவர் நடித்த தாராள பிரபு படத்தில் இவரின் காமெடிகள் பெரிதும் ரசிக்கப்பட்டது. மேலும் இவர் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன்''. ட்விட்டரில் தொடர்ந்து வரும் ரசிகர்களுக்கு இடையிலான சண்டைகளினால், அவர் இப்படி ஒரு ட்வீட்டை பதிவிட்டிருப்பதாக சோஷியல் மீடியா சொல்கிறது. 

Entertainment sub editor