www.garudabazaar.com

"கர்ப்பமா இருக்கீங்களா?".. கேள்வி கேட்ட ரசிகருக்கு மணிமேகலை அளித்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நிகழ்ச்சியில் VJ ஆக தோன்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் மணிமேகலை.

Cook with comali manimegalai answer about her pregnancy

இதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் கோமாளியாக தோன்றிய மணிமேகலை, பல பேரின் ஃபேவரைட் கோமாளி என்றும் அறியப்பட்டார்.

இது தவிர, மணிமேகலை அடிக்கடி பகிரும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ கூட மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை.

முன்னதாக கடந்த மூன்று சீசன்களிலும் குக் வித் கோமாளி தொடரில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பை பெற்ற மணிமேகலை சில நாட்களுக்கு முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

Cook with comali manimegalai answer about her pregnancy

இந்நிலையில் மணிமேகலை, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "கர்ப்பமாக இருக்கீங்களா?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மணிமேகலை, "நான் கர்ப்பமாக இல்லை. அவ்வாறு வந்த செய்திகள் தவறானது. அவ்வாறு இருந்தால் யூடியூப் சேனல்கள் சொல்லும் முன்பே நான் அந்த செய்திகளை அறிவிப்பேன்." என மணிமேகலை பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali manimegalai answer about her pregnancy

People looking for online information on Cook with comali, Manimegalai will find this news story useful.