குக் வித் கோமாளி அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படம்.. வெளியான வித்தியாசமான டிரெயலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Cook With Comali Ashwin Prabhu Solomon SEMBI Movie Trailer Released

Also Read | நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை நமிதாவின் Pregnancy போட்டோஷூட்.. வைரலாகும் வீடியோஸ் & போட்டோஸ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். கடந்தாண்டு சமீபத்தில் இரண்டாவது சீசன் முடிவடைந்தது, அதில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ஷகிலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம்  அஸ்வின் குமார், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா, சிவாங்கி, புகழ் மற்றும் பாலா போன்ற அனைத்து நபர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவானது. CWC-ல் பங்குபெறுவதற்கு முன்பு அஸ்வின், துல்கர் சல்மான் நடித்த மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' (2015), துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்யா வர்மா' (2019) ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Cook With Comali Ashwin Prabhu Solomon SEMBI Movie Trailer Released

கடைசியாக "என்ன சொல்லப்போகிறாய்" எனும் படத்தில்  அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரபு சாலமன் ஏற்கனவே விக்ரமை வைத்து கிங், தனுசை வைத்து தொடரி படங்களை இயக்கியவர்.

Cook With Comali Ashwin Prabhu Solomon SEMBI Movie Trailer Released

பிரபு சாலமன் இயக்கிய மைனா, கும்கி படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.மைனா படத்திற்கு தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா, நடிகை கோவை சரளா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை Trident Arts ரவி தயாரித்துள்ளார்.  ’செம்பி’ என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவை சரளாவின் வயதான பாத்திரத்தோடு முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. மேலும் அஸ்வின் ஒரு சிறுமியோடு அமர்ந்திருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படம் உருவாகி வருகிறது.

Cook With Comali Ashwin Prabhu Solomon SEMBI Movie Trailer Released

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்தது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று ரிலீசாகி உள்ளது. டிரெய்லரில் கோவை சரளா வயதான பாட்டியாக தோன்றியுள்ளார், தம்பி ராமையா பஸ் கண்டக்டராக தோன்றியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் பிரபு சாலமன், எதார்த்தமான இடங்களை விரும்புவதாலும், மேலும் இந்த படத்தில் கணினி கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தாமல் லைவ் லொகேஷன் மற்றும் அசல் பஸ்ஸில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | 'விக்ரம்' ரிலீஸ் நாளில்.. கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு! பின்னணி தகவல்

குக் வித் கோமாளி அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படம்.. வெளியான வித்தியாசமான டிரெயலர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Ashwin Prabhu Solomon SEMBI Movie Trailer Released

People looking for online information on CWC Ashwin, Prabhu Solomon, Sembi movie, SEMBI Movie Trailer will find this news story useful.