பிரபு சாலமன் இயக்கத்தில் CWC அஸ்வின் நடிக்கும் ‘செம்பி’… டிரைலர் பற்றி வெளியான செம Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

Prabhu Solomon ashwin kumar sembi movie trailer update

Also Read | இரண்டாவது முறையாக இணைந்த பரத் & வாணி போஜன் … மிரட்டலான போஸ்டரோடு வெளியான Title

பிரபு சாலமன்…

மைனா திரைப்படத்துக்கு முன்பே இயக்குனர் பிரபு சாலமன் சில திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவரை வெகுவாகக் கவனிக்கவைத்தது அந்த திரைப்படம்தான். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கிய கும்கி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். இதையடுத்து அவர் இயக்கிய கயல், காடன் மற்றும் தொடரி ஆகிய திரைப்படங்கள் கவனத்தைப் பெற்ற படங்களாக அமைந்தன.

செம்பி…

இந்நிலையில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகர் அஸ்வின் குமார் நடித்துள்ள ’செம்பி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது.

Prabhu Solomon ashwin kumar sembi movie trailer update

கவனம் ஈர்த்த போஸ்டர்…

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் கோவை சரளா 90 வயது பட்டியாகவும், தம்பி ராமையா பஸ் கண்டக்டராகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் பெரும்பாலானக் காட்சிகள் பஸ்ஸில் படமாக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பிரபு சாலமனின் முந்தைய படங்களைப் போலவே இயறகை அழகு சார்ந்த கதையாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே மைனா படத்தில் பிரபுசாலமன் பஸ் விபத்துக் காட்சி ஒன்றை சிறப்பாக படமாக்கி ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Solomon ashwin kumar sembi movie trailer update

டிரைலர்….

சமீபத்தில் கோவை சரளாவின் வயதான பாத்திரத்தோடு முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. மேலும் அஸ்வின் ஒரு சிறுமியோடு அமர்ந்திருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படம் உருவாகி வருகிறது.

Prabhu Solomon ashwin kumar sembi movie trailer update

படத்தின் டிரைலர்…

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read | “ஏங்க நான் நடிச்ச படம் எதுவுமே பாத்ததில்லையா…” பிரியங்காவுக்கு செம்ம counter கொடுத்த கமல்

Prabhu Solomon ashwin kumar sembi movie trailer update

People looking for online information on Prabhu Solomon, Sembi movie, Sembi movie trailer update will find this news story useful.