Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

குக் வித் கோமாளி அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படம்! வெளியான செம MASS அப்டேட்! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

Cook with Comali Ashwin Prabhu Solomon New Movie Update

சமீபத்தில் இரண்டாவது சீசன் முடிவடைந்தது, அதில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ஷகிலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம்  அஸ்வின் குமார், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா, சிவாங்கி, புகழ் மற்றும் பாலா போன்ற அனைத்து நபர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவானது. CWC-ல் பங்குபெறுவதற்கு முன்பு அஸ்வின், துல்கர் சல்மான் நடித்த மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' (2015), துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்யா வர்மா' (2019) ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Cook with Comali Ashwin Prabhu Solomon New Movie Update

என்ன சொல்லப்போகிறாய் எனும் படத்தில் தற்போது அஸ்வின் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரபு சாலமன் ஏற்கனவே விக்ரமை வைத்து கிங், தனுசை வைத்து தொடரி படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய மைனா, கும்கி படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.மைனா படத்திற்கு தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா, நடிகை கோவை சரளா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை Trident Arts ரவி தயாரிக்க உள்ளார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Cook with Comali Ashwin Prabhu Solomon New Movie Update

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தற்போது  நடந்து வருகிறது. இந்த படத்தில் கோவை சரளா 90 வயது பட்டியாக நடிக்கிறார், தம்பி ராமையா பஸ் கண்டக்டராக நடிக்கிறார். இப்படத்தில் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது. இயக்குனர் எதார்த்தமான இடங்களை விரும்புவதாலும், மேலும் இந்த படத்தில் கணினி கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தாமல் லைவ் லொகேஷன் மற்றும் அசல் பஸ்ஸில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மைனா படத்தில் இது போல பஸ் காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Ashwin Prabhu Solomon New Movie Update

People looking for online information on Ashwin, குக் வித் கோமாளி அஸ்வின், கோவை சரளா, தம்பி ராமையா, பிர்பு சாலமன், Prabhu Solomon, Thambi Ramaiah will find this news story useful.