'தளபதியிலிருந்து...' - தர்பாரில் சூப்பர் ஸ்டார் குறித்து பிரபலம் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 07, 2019 07:43 PM
'பேட்ட' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக கே.சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பேசிய படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ''தளபதி'யிலிருந்து 'தர்பார்' வரை ரஜினி சார் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்கிறார். இப்பொழுது ரஜினி சார் ஜிம்மிற்கு போகிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால் ரஜினி சார் திரையிலும் நிஜத்திலும் வேறு வேறு மனிதராக இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.