வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ Tracklist - பாடகர் சித் ஸ்ரீராம் விளக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 06, 2019 11:03 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நாளை (டிச.7) சென்னையில் நடைபெறுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியானது.
‘தர்பார்’ படத்தின் இசை நாளை (டிச.7) மாலை 5 மணிக்கு மேல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘தர்பார்’ படத்தின் டிராக் லிஸ்ட் குறித்த தகவல் பரவின. அதில், ‘கண்ணழகி’ என்ற பாடலை பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியிருப்பதாக கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த பாடகர் சித்ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை மறுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘இந்த டிராக் லிஸ்ட் உண்மையானதல்ல.. நான் அந்த பாடலை பாடவில்லை’ என தெரிவித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகிறது.
that track list isn't legit btw, sorry y'all
— Sid Sriram (@sidsriram) December 5, 2019
I haven't sung it.
— Sid Sriram (@sidsriram) December 5, 2019