”அன்பு பரவட்டும்…” பா.ரஞ்சித் படத்துக்காக ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த பிரபல நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 07, 2019 07:01 PM
பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் தாயாரிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கி இருந்தார்.

போர், சாதிய பேதங்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் துயரம் என்று பல்வேறு விஷயங்களை தொட்டிருந்த இப்படத்தில் காகித கொக்கு போருக்கு எதிரான அயுதமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.
இப்படத்தில் நடித்த ரித்விகா டிவிட்டரில் காகித கொக்கோடு ஒரு பதிவிட்டுள்ளார். “தோழர்களே… குண்டு படம் பார்த்தவர்கள் இது போன்ற காகித கொக்குகளை செய்து #காகிதகொக்குகுண்டு என்ற ஹேஷ்டேகில் போட்டோ எடுத்து பதிவிடுங்கள். அன்பு பரவட்டும். நன்றி” என்று அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
தோழர்களே .... குண்டு படம் பார்த்தவர்கள் இதுபோன்ற காகித கொக்குகளை செய்து #காகிதகொக்குகுண்டு என்கிற hastag ல் போட்டோ எடுத்து பதிவிடுங்கள்.
அன்பு பரவட்டும். நன்றி#Gundureview @AthiraiAthiyan @officialneelam @GunduTheMovie pic.twitter.com/POOKJv1q7l
— Riythvika✨ (@Riythvika) December 7, 2019