'Blood-னால எழுதி அனுப்புவாங்க' - ரஜினி, கமலுடன் நடித்த அனுபவங்கள் குறித்து மீனா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 03, 2019 09:28 PM
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மீனா. தற்போது அவர் கரோலின் காமாக்ஷி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை மீனா Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசினார்.
அதில், ''எனக்கு ரஜினி சார், பாக்யராஜ் சார், கார்த்திக் சார் இவங்க மூனு பேர் கிட்டயும் வொர்க் பண்றது ரொம்ப கஷ்டம். குறிப்பாக காமெடி காட்சிகளில் அவங்க பண்ணுவது அப்படி சிரிப்பாக இருக்கும். விழுந்து விழுந்து சிரிப்போம். ரெண்டு மூனு வாட்டி எடுப்பாங்க. சில நேரங்களில் அதையும் தாண்டி போகும்.
ரசிகர்கள் எனக்கு லெட்டர் அனுப்பும் போது ரத்தத்தினால் எழுதி அனுப்பியிருக்காங்க. அதனை பார்க்கும் போது பயமாக இருக்கும். பிறகு இப்படிலாம் பண்ணாதீங்க, உங்கள் அன்பு இருந்தா போதும் என பதில் அனுப்புவேன்'' என்று தெரிவித்தார்.
'BLOOD-னால எழுதி அனுப்புவாங்க' - ரஜினி, கமலுடன் நடித்த அனுபவங்கள் குறித்து மீனா வீடியோ