‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா - அனிருத்தின் சரவெடி மியூசிக்கில் அரங்கமே சும்மா கிழிய போகுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

Superstar Rajinikanth's Dabar grand Audio laucnh set to happen on Dec 7 at Nehru Stadium

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ சரவெடி இசையில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான ‘சும்மா கிழி’ பாடல் நேற்று (நவ.28) ரிலீசானது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வரும் டிச.7ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி முதல் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ‘சும்மா கிழி’ பாடலே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா வேற லெவல் கிழியாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.