நடிகர் ரஜினி தேர்தலில் களமிறங்குவது குறித்து ரங்கராஜ் பாண்டே அதிரடி பேச்சு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 03, 2019 07:06 PM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எளிய மனிதரின் எழுபதாவது பிறந்தநாள் விழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் ரசிகர்கள் மத்தியில் ரங்கராஜ் பாண்டே உரையாடினார்.
அப்போது பேசிய அவர், ''அரசியலில் மாற்றத்தை ரஜினிகாந்தால் தான் கொண்டு வர முடியும் என நிறைய பெரிய மனிதர்கள் சொல்கிறார்கள். நீங்கள் ஓட்டு வாங்க கிளம்பினால் தான் அது நடைமுறையில் சாத்தியமாகும். இல்லனா அது கனவாகவே போய்விடும். 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்தால் 34 பேர் மாற்று கட்சிக்கு சென்று விடுவார்கள்.
அரசியலுக்கு அடிப்படை ராஜதந்திரம். வியூகம். உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் தலைவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் 234 தொகுதியிலும் அவரே நிற்கிறார் என்று நினைத்தால் மட்டும் தான் கதைக்காகும். நமக்கு எதிராக நிற்கப்போகிறவர்கள் ஜாம்பவான்கள். நமக்கு இன்னும் அரசியல் தெரிய வேண்டும்'' என்று பேசினார்.
நடிகர் ரஜினி தேர்தலில் களமிறங்குவது குறித்து ரங்கராஜ் பாண்டே அதிரடி பேச்சு வீடியோ