“தெலங்கானா போலீஸ் நீதியை..” - பாலியல் வன்முறை என்கவுண்டர் பற்றி நயன்தாரா அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடையா 4 குற்றவாளிகளையும் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

Actress Nayanthara statement about Telangana Encounter on Vet doctor Rape and Murder case

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவருக்கு நிகழ்ந்த கொடுமை குறித்தும், குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை குறித்தும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நடிகை நயன்தாரா பெண்களின் பாதுகபபு குறித்த கல்வி புகப்பட்ட வேண்டும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியுள்ளனர். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளனர். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்”.

“நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு சற்றே ஆறுதல் அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை பயம் தரும்”.

“மனிதம் என்பது அனைவரிடத்திலும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே. நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண்பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும்”.

“பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்திலும் பகிர்ந்துக் கொள்ள முடியும். என தெரிவித்துள்ளார்”.