'அவங்க நம்மை பிரிக்கிறாங்க' - பாஜக அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கடும் சாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்குள் அடைக்கலமாக வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்களுக்கான குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Cinematographer PC Sreeram Comments BJP Governments CitizenShip Bill

ஆனால் இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு புறம் இந்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ''அவர்கள் நம்மை பிரிக்கிறார்கள். சிஸ்டம் மீதான நம்பிக்கை மெதுவாக குறைந்து வருகிறது. மதச்சார்பற்ற எண்ணம் உறுதியானது. தொடர்ந்து உறுதியாக செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.