ரஜினிகாந்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எச்.ராஜா கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 03, 2019 09:35 PM
'பேட்ட' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். லைக்கா புரொடக்சன் தயாரித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோவாவில் 50 வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
இதற்கு பல்வேறு பிரபலங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, ''நண்பர் ரஜினிகாந்திற்கு திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இது தனி மனிதருக்கான விருதல்ல. தமிழ மக்களை பெருமைப்படுத்தும் விருது'' என்று குறிப்பிட்டுள்ளார்.