''உங்க வேலை பேசுது'' - இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் கைதி படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

PC Sreeram appreciates Lokesh Kanagaraj's for Karthi's Kaithi

அதன் ஒரு பகுதியாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கைதி' படத்தை தற்போது தான் பார்த்தேன். மன்னிக்கவும் நான் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன்.

'கைதி' இருக்கை நுனியில் பார்க்கும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. இந்த படம் இரவில் நடப்பது போன்று எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் லோகேஷ். உங்கள் வேலை பேசுகிறது சத்யன் சூரியன். பெருமைப்படுகிறேன் என்று குறிப்பட்டுள்ளார். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.