சூரி, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 09, 2019 06:51 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘தலைவர் 168’ படத்தில் பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படமான ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமான அறிவிப்பு வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ‘தலைவர் 168’ படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் காமெடி நடிகர் சூரி இத்திரைப்படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
The talented @prakashraaj joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/CeUANycREW
— Sun Pictures (@sunpictures) December 9, 2019