சின்ன பையன்னு நெனச்சா... எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லுகிறான் பாருங்க... வைரலாகவும் வீடியோ...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா. சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. இந்நிலையில் குழந்தை நட்சத்திரம் அஸ்வத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இவர் நடித்திருந்த கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
வீடியோவில் அவர் தனது குழந்தை குரலில் மக்களுக்கு தைரியம் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் " ஸ்கூலாம் லீவு விடுறாங்கனு யாரும் பயப்பட வேண்டாம். அது நம்ம பாதுகாப்புக்கு மட்டும் தான். கொரோனலாம் ஒன்னும் இல்லை. நில்லுன்னு சொன்னா நின்னுடுமா கொரோனா வைரஸ். எல்லாரும் தைரியமா பாதுகாப்பா இருங்க.முடிஞ்சா ரெண்டு முறை கூட குளியுங்க" என்று கூறுகிறார்.
Please Don't panic, Stay Calm and Keep your personal hygiene care. #CoronavirusOutbreak pic.twitter.com/BQ8xIzum9N
— Ashwanth Ashokkumar (@actorashwanth) March 17, 2020