அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் லாக்டவுனுக்கு முன்னால் வெளியான படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்து ஹிட் அடித்த இந்தப் படம் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

தெலுங்கில் PVP நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகையர் தேர்வு இன்னும் முடிவாகாத நிலையில், தற்போது கன்னடம் மற்றும் ஹிந்திலும் கூட இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது என்ற தகவலை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்தார்.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மும்மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அசோக் செல்வனே ஹீரோவாக நடிப்பாரா என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. யூகங்களுக்கு விடைக் கொடுக்கும் வகையில், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் இயக்குனர்.
அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய அடுத்த தமிழ் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். நல்ல கதை அமைந்துவிட்டதாகவும், எழுத்து வேலைகளை ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த மிஸ்டர் கூல் இயக்குனரின் அடுத்த ஜானர் என்னவென்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.